2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மர்மப்பொருள் வெடித்ததில் சிறுவன் காயம்

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 14 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், ரீ.எல்.ஜௌபர் கான்

மர்மப்பொருள் வெடித்ததில் சிறுவன் ஒருவன் காயமடைந்த சம்பவம் மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு, திருப்பெருந்துறைப் பகுதியிலேயே இந்த சம்பவம் வெடம்பெற்றுள்ளது.

திருப்பெருந்துறையிலுள்ள வேளாங்கேனி ஆலயத்திற்கு முன்பாக உள்ள வளவொன்றிற்குள் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் அங்கு கிடந்த இரும்பிலான பொருளொன்றை எடுத்து இன்னுமொரு பொருளுடன் அடித்த போது அந்த மர்மப்பொருள் வெடித்துள்ளது.

இதில் காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் மட்டக்களப்பு திருப்பெருந்துறையைச்; சேர்ந்த  வீரசிங்கம் மதுசன்(10) என பொலிசார் மேலும் குறிப்பிட்டனர்.

இந்த மர்மப்பொருள் பொருள் வெடி பொருளென தெரிவித்த பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X