2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

மத்தியஸ்த சபையில் பெண்கள் பற்றிய பிரச்சினைகளே அதிகம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ஜவ்பர்கான்

மத்தியஸ்த சபைகளுக்கு 90 சதவீதமான பிரச்சினைகள் பெண்கள் தொடர்பானவையாகவே கிடைப்பதாக காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தலைவர் எம்.ஐ.எம்.உசனார் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் ஏற்பாட்டில்  'பெண்களுக்கு எதிராக ஏற்படும் வன்முறைகளை தடுத்தல்' எனும் தலைப்பில் காத்தான்குடியில் நேற்று  திங்கட்கிழமை (14) செயலமர்வு நடைபெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'மத்தியஸ்த சபைகளில் அதிகமான பிரச்சினைகள் பெண்கள் சார்ந்த பிரச்சினைகளாவே வருகின்றன. இவைகளை தீர்ப்பதற்கு பெண் மத்தியஸ்தர்கள் மத்தியஸ்த சபைகளில் அங்கம் வகிக்க வேண்டும்.

இதற்காகவே தற்போது மத்தியஸ்;;த சபைகளில் பெண்கள் மத்தியஸ்தர்களாக நியமிக்கப்படுகின்றார்கள். மத்தியஸ்த சபைகளுக்கான மத்தியஸ்தர்களை பிரதேச செயலாளர்கள் நியமிக்கும்போது, 50 சதவீதமான பெண்கள் அதில் உள்ளடக்கப்பட்டிருத்தல் முக்கியமானதாகும்.
பிணக்குகளை தீர்த்துக்கொள்வதற்காக மத்தியஸ்;த சபைகளுக்கு வரும் பெண்களை அவர்களின் பிரச்சினைகளை விசாரித்து அவர்களை இணக்கப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மத்தியஸ்த சபைகளில் பெண் மத்தியஸ்;தர்கள் முக்கியமானதாகும்.

அத்தோடு பெண் மத்தியஸ்தர்களிடம் தமது பிரச்சினைகளை பெண்கள் எவ்வித ஒளிவுமறைவுமின்றி எடுத்துக் கூறுவார்கள்.  எமது காத்தான்குடி மத்தியஸ்த சபையில் பெண்கள் தொடர்பான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதற்காக பெண் மத்தியஸ்தர்களையும் பொறுப்பாக்குகின்றோம்' என்றார்.

காத்தான்குடி நகர சபையின் பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்தச் செயலமர்வில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் பிராந்திய இணைப்பாளர் எம்.எஸ்.ஜெலீல், வளவாளராக மௌலவி எம்.பரீட் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X