2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வவுனதீவில் அனர்த்த அபாய தணிப்பு தினத்தையொட்டி வீதிநாடகம் அரங்கேற்றம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


சர்வதேச அனர்த்த அபாய தணிப்பு தினத்தையொட்டி வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கொத்தியாபுலை கிராமத்தில் வீதிநாடம் ஒன்று அரங்கேற்றப்பட்டது.

கொத்தியாபுலை கிராமசேவகர் பிரிவு அனர்த்த முகாமைத்துவ குழுவினால் இந்நாடகம் நேற்று திங்கட்கிழமை அரங்கேற்றப்பட்டது.

அனர்த்த தணிப்பு செயற்பாட்டில் வலது குறைந்தோரை உள்வாங்குதலை தொணிபொருளாக கொண்டு இந்நாடகம் தயாரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு,  மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் ஒக்ஸ்பாம் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் உதவியுடன் ஒழுங்கு செய்யப்பட்டிரு;தது.

இந்நிகழ்வில் வவுணதீவு பிரதேச செயலாளர் வெ.தவராஜா, மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன், அரச, அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதனூடாக அனர்த்த அபாய தணிப்பு தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்பணர்வு எற்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் குறிப்பிட்டார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .