2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தின விழா

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வற்றோரின் ஊர்வலம் பரந்தனில் இன்று செவ்வாய்கிழமை (15) நடைபெற்றது.  (படம்:- சுப்பிரமணியம் பாஸ்கரன்)

வன்னி வழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஊர்வலம் கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்தியிலுள்ள தேவாலய முன்றலிலிருந்து ஆரம்பமாகி கிளிநொச்சி கரைச்சி வடக்கு பலநோக்கு கூட்டுறவு சங்கம் வரையிலும் சென்றது.

தொடர்ந்து வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் தலைவர் எஸ்.ரூபராஜ் தலைமையில்  கரைச்சி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

57 ஆவது படைப்பிரிவின் கட்டளைத்தளபதி இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த விழிப்புணர்வற்றோர்களுக்கு வெள்ளைப் பிரம்புகள் இந்நிகழ்வில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய சங்கத் தலைவர் எஸ்.ரூபராஜ்,

முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதியில் யுத்தத்தினால் கண்பார்வையற்றோர் அதிகமாக காணப்படுகின்றதுடன், சமூகத்தில் கண்பார்வையற்றோர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்கி வருவதாகவும், இவர்களுக்கான அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X