2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகக்கண்காட்சி

Kogilavani   / 2013 ஒக்டோபர் 15 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வாழைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி இன்று பேத்தாளை பொது நூலகத்தில் இடம்பெற்றது.

பேத்தாளை பொது நூலகத்தின் நூலகர் ரீ.சரவணபவான் தலைமையில் இடம்பெற்ற புத்த கண்காட்சியினை வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் வாழைச்சேனை பிரதேசசபை செயலாளர் எஸ்.சிகாப்தீன், கல்குடா கல்வி அலுவலக வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா, வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், வாழைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.குணலிங்கம் ஆகியோரும் பிரதேச பாடசாலைகளின் மாணவர்களும் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .