2025 மே 03, சனிக்கிழமை

மாணவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது: கி.துரைராசசிங்கம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல்-சக்திவேல்

'தற்போதிருக்கின்ற கல்வி முறையில் மாணவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. அன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கு, விளையாடுவதற்கு, வாசிப்பதற்கு என்றெல்லாம் நேரம் இருந்தது. ஆனால் இபோதைய காலக்கட்டத்தில் மாணவர்கள் பாடசாலை விட்டு வந்தால் பகுதிநேர வகுப்புக்களுக்கு திரிகின்றார்ள்' என்று  கிழக்கு மாகாணசபை உறுப்பினர் (சட்டத்தரணி) கி.துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். 

தேசிய வாசிப்பு மாத்தினை முன்னிட்டு மட்டக்களப்;பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்ப்பட்ட களுதாவளை கிராமத்தின் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நூலக கண்காட்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்  

21 ஆம் நூற்றாண்டில்; வாசிப்பதற்கு ஒரு மாதம் ஒதுக்க வேண்டிய நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதனை நினைக்க வேதனையாகவுள்ளது.

தற்போதிருக்கின்ற கல்வி முறையில் மாணவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது. அன்றைய காலக்கட்டத்தில படிப்பதற்கு விளையாடுவதற்கு, வாசிப்பதற்கு என்றெல்லாம் நேரம் இருந்தது.

ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் மாணவர்கள் பாடசாலை விட்டு வந்தால் பகுதிநேர வகுப்புக்கள் என்று திரிகின்றார்கள். இவ்வாறான நிலையிலும்கூட பெற்றோர்கள் தமது பிள்ளையின் கல்வி மற்றும் புள்ளிகளைப் பற்றிக் கணக்கெடுக்காமல் பக்கத்து வீட்டுப்பிள்ளை எத்தனை புள்ளிகளை பெற்றிருக்கின்றார்கள் என்பத்தில்தான் அக்கறையுடன் செயற்படுகின்றார்கள்.

தங்களின் பிள்ளைகளில் கவனம் செலுத்தாமல் ஏனைய பிள்ளைகளின் மீதுதான் பெற்றோரின் கவனம் செல்கின்றது.

இவைகளை விட்டு விட்டு பிள்ளைகளின் திறமைகளை அவர்களுடாகவே அறிய வேண்டும். அவர்களின் ஆற்;றல்களை அடையாளம் கண்டு அவர்களின் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படல் வேண்டும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X