2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 18 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், ஜவ்பர்கான்,வடிவேல் சக்திவேல்


சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊர்வலமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு, உதயம் விழிப்புலனற்றோர் சங்கமும் கல்முனை லயன்ஸ் கழகமும் இணைந்து இந்த ஊர்வலத்தை நடத்தியது.
இந்த ஊர்வலத்தில் விழிப்புலனற்றோர்கள் கலந்துகொண்டதுடன் கல்முனை லயன்ஸ் கழக பிரதிநிதிகள், மட்டக்களப்பு

மற்றும் கிழக்கு பலக்லைக்கழகம், பாடுமீன் லயன்ஸ் கழகங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இந்த ஊர்வலம் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திலிருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு கல்லடி நொச்சிமுனையிலுள்ள உதயம் விழிப்புலனற்றோர் சங்கத்தின் அலுவலகம் வரை சென்றது.

இதில் லயன்ஸ் கழக பிரதி ஆளுனர் லயன் இ.டபிள்யு.கரிசந்த, கல்முனை லயன்ஸ் கழக தலைவர் எஸ்.வியஜதாச, மட்ட்களப்பு பிராந்திய தலைவர் எஸ்.மனோகரன், மட்டக்களப்பு லயன்ஸ் கழக தலைவர் எம்.ராஜா உட்பட லயனஸ்கழகத்தின் முக்கியஸ்த்தர்கள் கலந்துகொண்டனர்.

 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .