2025 மே 03, சனிக்கிழமை

பல நெனசல அறிவகங்கள் மூடப்பட்டுள்ளன: ஹிஸ்புல்லாஹ்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நெனசல அறிவகங்கள் மூடப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடிப் பிரிவின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி தெற்கு கிராமத்தில் நெனசல அறிவகம் ஒன்று நேற்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்;டக்களப்பு மாவட்டக் கிளையின் பிரதித் தலைவர் எம்.எஸ்.எம்.அப்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்  இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவர் ரி.வசந்தராசா, காத்தான்குடி நகர சபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

'மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இந்த நெனசல அறிவகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. நான் தான் முதன்முதலில் கிழக்கு மாகாணத்தில் நெனசல அறிவகத்தினை ஆரம்பித்து திறந்து வைத்தேன்.

இன்று கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல நெனசல அறிவகங்கள் மூடப்பட்டு விட்டன. அவ்வாறு மூடப்பட்ட நெனசல அறிவகமொன்றையையே இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் காத்தான்குடி பிரிவு பொறுப்பேற்று அதை இன்று திறந்து வைத்துள்ளது.

தொழில்நுட்ப அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இந்த அறிவகங்கள் ஆரம்பிக்கப்படுகின்றன. சிறுவயதிலேயே தொழில்நுட்ப அறிவை இலகுவாக இதன் மூலம் பெற்றுக் கொள்ளமுடியும். இன்று உலகில் தொழில்நுட்பத் துறைக்கு அதிகம் வரவேற்பு இருக்கின்றது. இலகுவாக இதன் மூலம் வெளிநாடுகளில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உண்டு. இந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறுவயதிலேயே அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்கள் இந்த அறிவை பெற்றுக்கொள்கின்றனர்' என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X