2025 மே 03, சனிக்கிழமை

செங்கலடி, ஏறாவூர் நகர்களில் யானைகள் ஊடுருவல்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி மற்றும் ஏறாவூர் நகர்களுக்கு அருகில்  தொடர்ந்தும்  காட்டு யானைகள் ஊடுருவி வருகின்றன.

நேற்று செவ்வாய்க்கிழமையும் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமையும்  மேற்படி காட்டு யானைகளை குறித்த பகுதிகளில்;  காணக்கூடியதாக இருந்தது.

சுமார் 6 யானைகள் இவ்வாறு செங்கலடி நகர் மற்றும் ஏறாவூர் நகருக்கு  அருகில் ஊடுருவி வந்து அந்த இடங்களிலேயே உணவு உட்கொண்டு, நீர் அருந்தி இளைப்பாறுகின்றன.

மேற்படி காட்டு யானைகள் கடந்த இருவாரங்களுக்கு முன்னர் முதன்முறையாக ஏறாவூர் மற்றும் செங்கலடி நகரப்பகுதியை அண்டியுள்ள கறுப்புப்பாலப் பகுதியில் ஊடுருவியபோது, மேற்படி யானைகளை வனவளத்; திணைக்கள அதிகாரிகள் விரட்டியடித்திருந்தனர்.

முதன்முறையாக 3 காட்டு யானைகளே செங்கலடி நகருக்கு அருகிலுள்ள கறுத்தப்பாலத்தடியில் வந்து இளைப்பாறின. ஆனால், இதனைத் தொடர்ந்து தினமும் 5 இற்கும் மேற்பட்ட யானைகள் வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X