2025 மே 03, சனிக்கிழமை

சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வுகள் கர்ப்பிணித்தாய்மாருக்கு நடாத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வழிகாட்டலில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் இவ்விழிப்புணர்வு செயலமர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கர்ப்பிணித்தாய்மாருக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலான செயலமர்வு செவ்வாய்க்கிழமை (22) ஆரையம்பதி பிரதேச சுகாதார அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்றவைகள் தொடர்பாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் என்.அசோக் பெர்ணான்டோ விரிவுரைகளை நிகழத்தினார்.

இந்த செயலமர்வில் ஆரைமய்பதி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு மற்றும் சமூக நல உத்தியோகத்தர் ஆர்.சரோஜினி மற்றும் சுகாதார அலுவலக உத்தியோகத்தர்கள் உட்பட கர்ப்பிணித்தாய்மார்கள் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X