2025 மே 03, சனிக்கிழமை

காட்டு யானைகளினால் பாடசாலையின் சுற்று மதில் சேதம்

Super User   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சின்னவத்தை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் சுற்று மதிலை காட்டு யானைகள் இன்று புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தியுள்ளன.

நான்கு யானைகள் கூட்டமாக வந்து குறித்த கிராமத்தினுள் புகுந்து மரவெள்ளி மற்றும் வாழைத் தோட்டங்களை அழித்துள்ளதுடன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் முன் பக்க சுற்று மதிலையும் உடைத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர், வெல்லாவெளி பொலிஸார், பட்டிருப்பு வலய கல்வி பணிப்பாளர், முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

யானைகளின் தாக்குதல் காரணமாக இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக பிரதேச மட்டத்தில் நாம் சகலருக்கம் அறிவித்தும் இதுவரையில் தீர்க்கமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இதனால நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலாளரை சந்தித்து மகஜர் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X