2025 மே 03, சனிக்கிழமை

மத்தியஸ்தசபை உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் நீதி அமைச்சினால் முதன்முறையாக நியமிக்கப்பட்ட மத்தியஸ்த சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள்; நேற்று புதன்கிழமை வழங்கப்பட்டன.

வாகரை பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் 16 கிராம அலுவலகர் பிரிவுகளிலிருந்து மத்தியஸ்த சபைக்கு 26 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பதவிக்காலம் 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும் என்று நீதி அமைச்சின் கீழுள்ள இலங்கை மத்தியஸ்த சபையின் செயலாளர் ஒப்பமிட்டு இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X