2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக்கொண்டு வந்த மூவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எஸ்.எம்.எம்.முர்ஷித்


சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக்கொண்டு வந்ததாகக் கூறப்படும் 3 பேரை வாகரைப் பொலிஸார் நேற்று புதன்கிழமை கைதுசெய்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பொலிஸ் பிரிவில் ஒமாடியாமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக்கொண்டு வந்ததாகக் கூறப்படும் மூவரையையே கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மூவரையும் கைதுசெய்துள்ளதுடன், 27 முதிரை மரக்குற்றிகள்; ஏற்றப்பட்ட உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .