2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

விசேட தேவையுடைய பாடசாலை ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு

Kogilavani   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்


விசேட தேவையுடைய பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பத்து வீத சம்பள உயர்வை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளதாக மட்டக்களப்பு, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.

காத்தான்குடி ஷாஹிறா விசேட பாடசாலை மாணவர்களின் ஆக்கத்திறன் வெளிப்பாட்;டு கண்காட்சி வியாழக்கிழமை (24) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியில் மேற்படி பாடசாலை மாணவர்களினால் தயாரிக்கப்பட்ட கைப்பணிப் பொருட்கள் பெருமளவில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில், காத்தான்குடி உதவிக் கல்வி பணிப்பாளர் எம்.ஐ.எம்.சுபைர் மற்றும் கல்வி அதிகாரிகள் பலரும் சமுகமளித்திருந்தனர்.

பெருமளவிலான பாடசாலை மாணவர்கள் இக் கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .