2025 மே 03, சனிக்கிழமை

மரத்தடிகள் வீழ்ந்ததில் குடும்பஸ்தர் மரணம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 24 , மு.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கபோடி சசிகுமார்

கட்டிடத்திற்கு தளபாடங்கள் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றிலிருந்து மரத்தடிகள்; சரிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை களிகட்டு பாலத்தடியில் இன்று வியாழக்கிழமை முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அரசடிதீவைச் சேர்ந்தவரும்  விடுதிக்கல்மடுவில் வசித்துவருபவருமான 3 பிள்ளைகளின் தந்தையான காத்தமுத்து ரவிச்சந்திரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

கட்டிடத்திற்கு தளபாடங்கள் ஏற்றிச் சென்றுகொண்டிருந்த மேற்படி வாகனத்திலிருந்து மரத்தடிகள் சரிந்து வீதியால்; சைக்கிளில் சென்றுகொண்டிருந்த மேற்படி நபரின் தலையில்  வீழ்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து உடனடியாக மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X