2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மாநாட்டு மண்டபம் திறப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.எல்.ஜௌபர் கான்


கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் நேற்று திங்கட்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

சுமார் 17 மில்லியன் ரூபா செலவல் நிர்மாணிக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தை உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி.திசாநாயகா திறந்துவைத்தார்.

நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி கே.பிரேம்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி கே.கிட்ணன் கோவந்தராஜா உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது மாணவர்களின் ஓவியக்கண்காட்சி கூடத்தையும் அமைச்சர் திறந்துவைத்ததுடன் நிறுவகத்தின் தேவைகள் மற்றும் குறைபாடுகள் குறித்தும் நிர்வாகத்துடன் கலந்துரையாடினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .