2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு பணியாளரின் பிள்ளைகளுக்கான ஊக்குவிப்பு திட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


வெளிநாட்டு பணியாளர்களாக சென்றவர்களின் பிள்ளைகளை இலங்கையில் ஊக்கப்படுத்தும்  நோக்கில், 'வெளிநாட்டு பணியாளரின் பிள்ளைகளுக்கான ஊக்குவிப்பு திட்டம்' (ரட்டவிருவோ தருதிரிய) என்ற ஒன்றினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முன்னெடுத்து வருகின்றது.

இத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த வெளிநாட்டு பணியாளர்களின் பிள்ளைகளை ஊக்கப்படுத்துவதற்கான போட்டி நிகழ்ச்சியொன்று மட்டக்களப்பு தன்னாமுனையிலுள்ள புனித வளனார் மகா வித்தியலாயத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 270 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது சித்திரம் வரைதல், பாட்டு போட்டி, நடனம், பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடைபெற்றதுடன் இதில் பங்கு கொண்டவர்களுக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் நலன்புரி பிரிவினால் அன்பளிப்பு பொருட்களும் வழங்கப்பட்டன.

இந்த வைபவத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகத்தின் நலன்புரி பிரிவின் பிரதி பொதுமுகாமையாளர் எம்.காமினி கருணாதிலக மற்றும் அதன் மட்டக்களப்பு அலுவலக பொறுப்பதிகாரி எம்.நிறுத்பவா, கல்முனை நிலைய பொறுப்பதிகாரி எம்.ஐ.நசார், உட்பட அதன் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .