2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

நல்லினப் பசுக்கள் விநியோகம்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 30 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் அங்கத்தவர்களுக்கு நல்லினப் பசுக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் அனுசரணையுடன் ஜேர்சி மற்றும் பிறீயன் இன பசுக்கள் 8 அங்கத்தவர்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.

ஒவ்வொருவருக்கும் 75,000 ரூபா தொடக்கம் 80,000 ரூபா பெறுமதியான  பசுக்கள் வழங்கப்பட்டன.

அத்துடன், இவர்கள் ஒவ்வொருவருக்கும் 25,000 ரூபா பெறுமதியான பண்ணை ஒன்றும் இலவசமாக அமைத்துக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், மேற்படி பசுக்களிலிருந்து பெறப்படும் பசும்பாலுக்கு நியாயமான விலையைப்  பெற்றுக்கொடுக்கவும் மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்படி பசுக்கள் கன்றுகளை ஈன்று பசும்பால் பெற்றுக்கொள்ளகூடிய வகையில், சினைப்படுத்தல் செய்யப்பட்டுள்ளன. இதனை கால்நடை வைத்தியரின் சான்றிதழ்; மூலம் தேவையேற்படின் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

இவ்வாறு வழங்கப்பட்ட ஒவ்வொரு பசுவுக்குரிய பெறுமதியில் அரைப் பெறுமதியை 2 வருடகாலத்தில்  மேற்படி பசுக்களிலிருந்து பால் கறக்கத் தொடங்கியவுடன்  பசு உரிமையாளர் சங்கத்திற்கு திருப்பிச் செலுத்துதல் வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுமுகாமையாளர் ம.நவறஞ்சன் தெரிவித்தார்.

இதற்கான நிகழ்வில் சுவீடன் கூட்டுறவு நிறுவனத்தின் கிழக்கு மாகாணத்திற்கான திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.தே.மயூரன்,  தலைவர் திரு த.காண்டீபன், உபதலைவர் கே.நிரோசன், சங்கப்  பணியாளர்கள் மற்றும்  அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .