2025 மே 03, சனிக்கிழமை

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் குறைகேள் நேரம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 31 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


தேவ அச்சதன்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் குறைகேள் நேரம் புதன்கிழமை (30) நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு மாவட்ட செயலக அதிகாரிகளுடன் விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன் முன்னிலையில் மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன் தீர்வுகளுக்குட்படுத்தினார்.

அதேநேரம், பிரதேச செயலக உத்தியோகத்தர்களது பிரச்சினைகள் தேவைகள் குறித்தும் கலந்துரையாடினதுடன் உரிய நடவடிக்கைகளுக்கும் உத்தரவிட்டார்.

இதன்போது, மாவட்ட செயலகத்திலிருந்து உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.நேசராஜா, சமுர்த்தி உதவிப்பணிப்பாளர் எம்.குணரட்ணம், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.தயாபரன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X