2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கில் இராணுவ ஆட்சி இல்லை: ஹிஸ்புல்லாஹ்

Super User   / 2013 நவம்பர் 02 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சி நடைபெறவில்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதியைமச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இந்த மாகாணத்தில் சிவில் நிருவாகமே நடைபெறுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார். மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன்,

"கிழக்கு மாகாணத்தில் இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் கடந்த கூட்டத்தில் இந்த மேய்ச்சல் தரை நிலம் விவகாரம் பேசப்பட்ட போது அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட இராணுவ அதிகாரி மாடுகளை கொண்டு செல்பவர்களின் பெயர் விபரங்களை தந்தால் அதற்கான அனுமதியினை வழங்குவோம் என்றார்.

அந்த அடிப்படையில் அவர்களின் பெயர் விபரங்கள் வழங்கப்பட்டன. அதன் பின்பு பண்ணையாளர்கள் தமது மாடுகளை மேய்ச்சல் தரை நிலங்களுக்கு கொண்டு சென்ற போது இங்கு விவாசயம் செய்யப்படுவதாக படை அதிகாரிகள் கூறி துரத்தியுள்ளனர்.

படை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அத்து மீறி மேய்ச்சல் தரை நிலங்களில் விவாசயத்தில் ஈடுபட்டுள்ளனர். அத்தோடு மாங்காடு மற்றும் குருக்கல் மடத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை கண்டித்து கண்டன பேரணியொன்று நடாத்துவதற்கு பொலிஸார் அனுமதி வழங்கியும் இராணுவத்தினர் அதை தடுத்தனர். இவைகள் எல்லாம் இங்கு இராணுவ ஆட்சியே நடைபெறுகின்றது என்பதை காட்டுகின்றது" என்றார்.

இதன் போது பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா குறுக்கிட்டு உங்களின் இந்த கூற்றை மறுக்கின்றேன். "இங்கு இராணுவ ஆட்சி நடைபெறவில்லை. நீங்கள் அரசியல் செய்வதற்காக இவற்றை கூறுகின்றீர்கள். உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்ளமுடியாது" என்றார்.

அத்துடன் இங்கு மாவட்ட செயலாளர்? பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் என சிவில் நிருவாக ஆட்சியே நடைபெறுகின்றது. இராணுவ ஆட்சி நடைபெறுகின்றது என்ற கூற்றை முற்றாக நான் மறுக்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது பிரதியைமச்சர் ஹிஸ்புல்லா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் ஆகியோருக்கு இடையில் பலத்த வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • AJ Saturday, 02 November 2013 12:38 PM

    அல்லாஹ்வின் பெயரில் அரசியல் செய்யும் இவரை விட அறியா அண்ணன் எவ்வளவோ மேல். எப்படி எல்லாம் அரசுக்கு விளக்கு பிடிக்க முடியுமோ அப்படி எல்லாம் இவர் பிடிக்கிறார்.

    மகனை ஒழுங்கா வளர்க்க வக்கு இல்லை இதில் ஊரை திருத்த வந்துட்டார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X