2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நவகிரி நகர் கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நவகிரி நகர் கிராமத்தில்  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காட்டு யானை ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளது. 

நவகிரி நகர் கிராமத்தினுள் புகுந்த குறித்த காட்டு யானை அந்தக் கிராமத்திலுள்ள வீடுகளை உடைத்து சேதமாக்கியுள்ளதுடன்,  பல பயன்தரும் மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக அந்தக் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இதன்போது 4 வீடுகளை முற்றாக குறித்த காட்டு யானை சேதப்படுத்தியுள்ளன. மேலும் மரவெள்ளி, பலா, வாழை உள்ளிட்ட மரங்களையும் சேதப்படுத்தியுள்ளதாக அந்தக் கிராம மக்கள் கூறியுள்ளனர்.

நவகிரி நகர் கிராமத்தினுள் புகுந்த குறித்த காட்டு யானையை வெளியேற்றுவதற்கு நள்ளிரவு 12 மணியாகி விட்டது. பட்டாசுகள் கொழுத்தியும் தீப்பந்தங்கள் கொழுத்தியும் சத்தமிட்டும் குறித்த காட்டு  யானையை விரட்டியதாக  நவகிரி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .