2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

நாய்களுக்கு தடுப்பூசி ஏற்றல்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 06 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று புதன்கிழமை  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள அரச கால்நடை வைத்தியர் காரியாலயத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட நடமாடும் சேவையின்போது,  நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு, கல்லடியில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.ஹாதியின் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வீடுகளில் காணப்படும் வளர்ப்பு நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளன.

மேலும், அரச கால்நடை வைத்தியர் குழு வீடு வீடாகவும் சென்று நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி ஏற்றிவருகின்றன.

இதேவேளை, மேற்படி  நடமாடும் சேவையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றுக்கான மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பண்ணைப் பதிவு, ஆடுகள் மற்றும் மாடுகளுக்கான சிகிச்சையும் அளிக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .