2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அரச துறையின் கருமங்களுக்காக இலத்திரனியல் தொடர்பாடலை பயன்படுத்துமாறு கோரிக்கை

Super User   / 2013 நவம்பர் 06 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

அரச துறையின் உத்தியோகபூர்வ கருமங்களுக்காக இலத்திரனியல் ஆவணங்கள் மற்றும் இலத்திரனியல் தொடர்பாடலை பயன்படுத்துதல் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத சகல அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச்சட்ட சபைகள் மற்றும் அரசுடமையான கம்பனிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

2013 ஒக்டோபர் 9ஆம் திகதியிட்டே இந்த சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிரூபத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"உத்தியோகபூர்வ கருமங்களுக்காக இலத்திரனியல் ஆவண மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல் (மின்னஞ்சல்) பாவனைக்கான  சகல சட்டரீதியான தேவைகளும் 2006ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல்கள் சட்டத்தினால் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இருந்து போதும் சொல்லப்பட்ட ஆவண மற்றும் தொடர்பாடல் பாவனை அரச துறையில் இன்னும் குறைந்த மட்டத்தில உள்ளது. ஆகையால் உத்தியோகபூர்வ கருமங்களுக்காக இலத்திரனியல் ஆவண மற்றும்  தொடர்பாடலைப் பயன்படுத்தும் பொருட்டு அவற்றின் பாவனை குறித்து சட்ட ரீதியான நிலைமையை  தெளிவுபடுத்துவது இச்சுற்று நிருபத்தின் நோக்கமாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .