2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாகன விபத்தில் ஒருவர் காயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 06 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இன்று  இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி மட்டக்களப்பு பிரதான வீதியில் மாவடிச்சேனை எனும் இடத்தில் வைத்து முன்பாக சென்றுகொண்டிருந்த வான் திரும்புவதற்கு எத்தணிக்கையில் பின்பாக வந்த முச்சக்கரவண்டி வானில் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் ஆட்டோவைச் செலுத்திவந்த மாவடிச்சேனையைச் சேர்ந்த எம்.ஐ.எம்.பாஹிம் (வயது – 23) என்பவரே காயமடைந்துள்ளார்.
காயமடைந்தவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரனைகளை வாழைச்சேனை பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .