2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வாகன விபத்தில் காயமடைந்த பிரதி அதிபர் பலி

Super User   / 2013 நவம்பர் 07 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பிரதி அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் இன்று காலை பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்களொன்றும் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து சம்பவத்தில் பிரதி அதிபரொருவர் உட்பட மூவர் படுயாமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போனதா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முருகானந்தன் தெரிவித்தார்.

விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மட்டக்களப்பு அமிர்தகழி சித்தி விநாயகர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர் ராஜ பாலேந்திரன் (50 வயது) என்பவர் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .