2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 07 , மு.ப. 07:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மழைக்காலம் ஆரம்பமாகியுள்ளதனால் மட்டக்களப்பு நகரில் டெங்கு பரவும் இடங்களாக அடையாளம் காணப்பட்ட இடங்கள் மற்றும் வடிகாண்களை துப்பரவு செய்யும் பணியில் மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகர சந்தை சதுக்கம், ஆற்றின் படுக்கைகள், மாநகர வீதிகளின் கான்கள் மற்றும் நீர் தேங்கி நிற்கும் இடங்கள் எல்லாம் சீர்செய்யப்படுகின்றன.

இதேவேளை டெங்கு பற்றிய விழிப்புணர்வூட்டும் நடவடிக்கைகளில் மாநகரசபையுடன் இணைந்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .