2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக விழிப்பூட்டல் செயலமர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 08 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்,  வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பில் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றன்.

இதன் ஒரு கட்டமாக பட்டிருப்பு கல்வி வலய மாணவர்களுக்கு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக விளக்கமூட்டும் ஒருநாள் செயலமர்வு இன்று களுதாவளை மஹா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார், பட்டிருப்பு வலய கல்வி பணிமனையுடன் இணைந்து சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் இச்செயலமர்வினை நடத்தினர்.

இச்செயமலர்வில், 13 பாடசாலைகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி பாதிய ஜெயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்க, பட்டிருப்பு வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் கே.ஞானராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களின் கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .