2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு நகர பஸ் நிலைய மணிக்கூடு இயங்குகிறது

Kogilavani   / 2013 நவம்பர் 11 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

நீண்டகாலமாக சரியான நேரத்தை காட்டாமல் இருந்த மட்டக்களப்பு நகர பஸ் நிலைய மணிக்கூடு தற்போது சீராக இயங்க தொடங்கியுள்ளது.

மட்டக்களப்பு நகர பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம் பழுதடைந்ததினால் தூர இடங்களுக்கு செல்லும் பிரையாணிகள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்தனர்.

இதனை சுட்டிக்காட்டி இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தியதின் விளைவாக மட்டக்களப்பு நகரபஸ் நிலைய மணிக்கூடு இப்போது சரியான நேரத்தைக் காட்டுகின்றது.

இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மற்றும் செய்தியை வெளியிட்ட  இணையத்தளத்திற்கும் (தமிழ்மிரர்) பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .