2025 மே 02, வெள்ளிக்கிழமை

சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பாக அறிவூட்டல் நிகழ்வு முன்னெடுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


திவிநெகும திணைக்களம் மற்றும் சமுர்த்தி வேலைத்திட்டம் தொடர்பாக மக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்தோறும் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி அதிகாரிகள் கிராமம் கிராமாக சென்று இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் முதல் கட்டமாக காத்தான்குடியிலுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கு அறிவூட்டும் செயலமர்வுகள் திங்கட்கிழமை (11) நடைபெற்றன.

இதில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரட்னம், மற்றும் காத்தான்குடி பதில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.கனிபா, காத்தான்குடி உதவி பிரதேச செயலாளர் ஏ.சி.அகமட்அப்கர், காத்தான்குடி பிரதேச செயலக சமுர்த்தி தலைமைக முகாமையாளர் இ.குணரட்னம், வலய முகாமையாளர்களான ஏ.பரமலிங்கம், ஏ.எல்.சுல்மி உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமுர்த்தி பயனாளிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது திவிநெகும வேலைத்திட்டம், முறையான சமுர்த்தி சிறுகுழுச் சேமிப்பு, சமுர்த்தி சங்கங்கள் மற்றும் சிறுகுழுக்களை பலப்படுத்தல், வாழ்வதார தொழில் முயற்சிகள் உட்பட சமுர்த்தி வேலைத்திட்;டம் போன்றவைகள் தொடர்பாக விளக்கி கூறப்பட்டன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .