2025 மே 02, வெள்ளிக்கிழமை

உள்ளூராட்சி செயலாற்றுகை போட்டியில் காத்தான்குடி நகரசபை முதலாமிடம்

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண மட்டம், 2012ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி செயலாற்றுகை போட்டியில் காத்தான்குடி நகரசபை முதலாமிடத்தை பெற்றுள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி திணைக்களம் ஆண்டுதோறும் நடத்திவரும் இந்த உள்ளூராட்சி செயலாற்றுகை போட்டியில் மட்டக்களப்பு மாநகரசபை முதலாமிடத்தையம், அக்கறைப்பற்று மாநகரசபை இரண்டாமிடத்தையும், கல்முனை மாநகரசபை மூன்றாமிடத்தினையும் பெற்றுள்ளது.

நகரசபைகளில் காத்தான்குடி நகரசபை முதலாமிடத்தையும், கிண்ணியா நகரசபை முதலாமிடத்தையும், திருகோணமலை நகரசபை மூன்றாமிடத்தையும், பிரதேச சபைகளில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபை முதலாமிடத்தையும், அட்டாளைச்சேனை பிரதேச சபை இரண்டாமிடத்தையும், மண்முனைப்பற்று பிரதேச சபை மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.உதயகுமார் அறிவித்துள்ளார்.

காத்தான்குடி நகரசபை இந்த போட்டியில் கடந்த 2010 மற்றும், 2011, 2012 ஆகிய மூன்றாண்டுகளிலும் முதலாமிடத்தை தொடர்ந்து பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .