2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆக்கத்திறன் கண்காட்சி

Kogilavani   / 2013 நவம்பர் 12 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட தாண்டியடிப் பாடசாலையில் கழிவுப் பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஆக்கத்திறன் கண்காட்சி நேற்று இடம்பெறறது.

மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தலைமைத்துவப் பயிற்சியின் மூலம் அவர்களை முன்னிலைப்படுத்தி பாடசாலை அதிபர் ஆர்.கிருஸ்ணபாலனின் வழிகாட்டலில் ஆசிரியை திருமதி ரோஜாரமணி இருதயநாதன் தலைமையில் இக்கண்காட்சி இடம்பெற்றுள்ளது.

இவ் ஆக்கத்திறன் கண்காட்சியில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான ஞா.சிறிநேசன், மகேந்திரகுமார், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.கணேசு ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .