2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வெள்ள நீரை வெளியேற்றுவதறகான முன் ஆயத்த நடவடிக்கைகள்

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்


மட்டக்களப்பில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்துள்ள நிலையில் வெள்ள நீர் தேங்காமல் நீரை வெளியேற்றுவதற்கான முன் ஆயத்த நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகர சபை முன்னெடுத்து வருகின்றது.

பருவப் பெயர்ச்சி மழை காலத்தில் நீர் வெளியேற முடியாமல் மட்டக்களப்பு நகர் பகுதி பாதிப்படைந்து வருகின்றது.
தற்போது பெரும்பாலான வீதிகள் கொங்ரீற் வீதிகளாக அமைக்கப்பட்டுள்ளதனால் கூடுதலாக நீர் தேங்கக் கூடிய சாத்தியம்

காணப்படும் நிலையில் இந் நீரினை தேங்காமல் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதேவேளை கொங்றீற் வீதிகள் அமைக்கப்பட்ட போதும் பெரும்பாலான வீதிகளின் ஓரங்களில் கிறவல் இடாமல் உள்ளதால் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது.
 
இதனால், மழை காலத்தில் விபத்துக்கள் இடம்பெறக் கூடிய அபாயம் இருப்பதனால் அவற்றிற்கும் கிறவல் இட்டு நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .