2025 மே 02, வெள்ளிக்கிழமை

சுண்ணாம்பு சுடும் இடத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பணிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு கோவில் குளம் பிரதான வீதியின் அருகில் சுண்ணாம்பு சுடும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறுகைத்தொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கையை வேறு இடத்தில் மேற்கொள்ளுமாறு பிரதேச சபையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சுண்ணாம்பு சுடுவதை வேறு இடத்திற்கு மாற்றுமாறு மேற்படி தொழிலாளர்களுக்கு மண்முனைப்; பற்று பிரதேச சபை அறிவுறுத்தியுள்ளது.

மட்டியின் ஓட்டை நெருப்பினில் சுடும்போது வெளிவரும் துர்நாற்றம் மற்றும் புகை என்பன சூழலை மாசடையச் செய்வதனால் இவ் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பணிபுரியும் தொழிலாளி தெரிவித்தார்.

சுண்ணாம்பு சுடுவதற்கான ஒதுக்குப்புறம்  புதுக்குடியிருப்பில் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுடுவதனால் பெறப்படும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக தங்களின் குடியிருப்பு பிரதேசமான கோவில் குளம் பிரதேசத்தை பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரையாணிகளினதும், குடியிருப்பாளர்களினதும் மற்றும் அருகில் பள்ளி வாசல் உள்ள காரணத்தினால் இத் தீர்மானத்தை பிரதேசசபை எடுத்துள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இத்தொழிலினூடான மேற்படி தொழிலாளர்கள் நாளாந்த ஜீவனோபாயத்திற்குரிய பணத்தை பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
20 கிலோ எடையுள்ள நீறுமூடயை ரூபாய் 400 இக்கு விற்பதாக  இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணொருவர் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .