2025 மே 02, வெள்ளிக்கிழமை

நீரிழிவு தினத்தையொட்டி நடைபவனி

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்
, ரி.எல்.ஜவ்பர்கான்

நீரிழிவு தினத்தையொட்டி காத்தான்குடியில் இன்று (13) காலை நடை பவணியொன்று நடைபெற்றது.
காத்தான்குடி சமூக நலனுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இந்த நடைபவணி நடைபெற்றது.

காத்தான்குடி பிரதான விதி 6ஆம் குறிச்சி இரும்புத்தைக்கா பள்ளிவாயல் சந்தியிலிருந்து  ஆரம்பமான இந்த நடை பவணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், காத்தான்குடி நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டர்கடர் யு.எல்.நசிர்தீன், காத்தான்குடி ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.ஜாபீர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது நீரிழிவு நோயின் தாக்கம், அதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிமுறைகள், நடை பயிற்சியின் முக்கியத்துவம் உணவு பழக்க வழக்கங்கள், தொற்றா நோயின் தாக்கம் போன்றவைகள் தொடர்பான விழிப்புணர்வை
ஏற்படுத்தும் பதாதைகளும் ஊரவலத்தில் கலந்துகொண்டோர் ஏந்திச்சென்றனர். 

இந்த நடை பவனி காத்தான்குடி முதலாம் குறிச்சியில் முடிவடைந்தது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .