2025 மே 02, வெள்ளிக்கிழமை

சிறுவர் அபிவிருத்தி நிலைய முகாமையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரப்பு சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சிறுவர் இல்ல முகாமையாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை செவ்வாய்க்கிழமை (12) மட்டக்களப்பு பொதுநூலக கேட்பேர்கூடத்தில் நடைபெற்றது.

யுனிசெப் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், வளவாளராக சிறுவர் பாதுகாப்பு ஆலோசகர் பி.ரவிச்சந்திரா கலந்து கொண்டார்.

அத்துடன் மட்டக்களப்பு நன்னடத்தை அலகின் பொறுப்பதகாரி திருமதி திரு ஞானசௌதந்தரியும் கலந்துகொண்டார்.

இப் பயிற்சிப்பட்டறையில், சிறுவர் இல்லங்களின் கோவைகளைப் பாராமரித்தல், சிறுவர் இல்லங்களின் சட்டங்கள், சிறுவர் இல்ல முகாமையாளர்களின் தகுதிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .