2025 மே 02, வெள்ளிக்கிழமை

யாழ் – மட்டு. புகையிரத சேவைக்கு கோரிக்கை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவையொன்றை ஏற்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் பி.எச்.ஆர். ஆரியரட்ன மற்றும் செயற்பாட்டு அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க ஆகியோரை புகையிரத திணைக்களத்தில் சந்தித்து இதற்கான வேண்டுகோளை விடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்தார்.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இருந்து நாளர்ந்தம் கூடுதலான பயணிகள் யாழ்ப்பானத்திற்கு செல்கின்றனர். இவர்கள் பஸ் வண்டிகளிலேயே செல்கி;ன்றனர்.

வியாபாரத் தேவையின் பொருட்டும் அத்தோடு ஏனைய பல்வேறு நடவடிக்கைகளுக்காகவும் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்கின்றனர். கிழக்கு மாகாணத்திலிருந்து இதற்காக பல பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுகின்றன.

கிழக்கு மாகாண மக்கள் வடக்குடன் பல தொடர்புகளை கொண்டவர்கள். இந்நிலையில் மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பானத்திற்கு ஒரு புகையிரத சேவையை தொடங்குவதன் மூலம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருப்பதுடன் போக்குவரத்தும் இன்னும் இலகுபடுத்தப்படுவதாக அமையும் என இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டியதாக பொன் செல்வராசா எம்.பி தெரிவித்தார்.

இந்த விடயம் கவனத்திற்கொள்ளப்படுமெனவும் தற்போது கிளிநொச்சிவரையிலான புகையிரத சேவையே இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் மட்டக்களப்பிலிருந்து கல்லோயா வரை சேவையில் ஈடுபட்டு வரும் ரயின் பஸ் வண்டியை மாகோ வரை நீடிக்கச் செய்து யாழ். தேவியுடன் இணைக்க முடியும்.

இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர்  பி.எச்.ஆர். ஆரியரட்ன மற்றும் செயற்பாட்டு அத்தியட்சகர் எல்.ஏ.ஆர்.ரத்னாயக்க ஆகியோர் தெரிவித்ததாக மட்டக்களப்பு மாவட்ட செல்வராசா எம்.பி மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .