2025 மே 02, வெள்ளிக்கிழமை

பொதுநலவாய மாநாடு வெற்றிபெற பள்ளிவாயலில் பிரார்த்தனை

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரி.எல்.ஜவ்பர்கான்


இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு வெற்றிபெறவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்;து தெரிவித்தும் காத்தான்குடியில் பாரிய துஆ பிரார்த்தனை வைபவமொன்று இடம்பெற்றது.

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா தலைவரும் பிரதேச காதி நீதிபதியுமான மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் இடம்பெற்ற வைபவத்தில் பெருமளவிலான உலமாக்களும் பொதுமக்களும் பங்குகொண்டனர்.

காத்தான்குடி பத்ரிய்யா ஜூம்ஆ பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இப்பிரார்த்தனை வைபவத்தின்போது அரபு மற்றும் தமிழ் மொழிகளில் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.

மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி பிரார்த்தனையை நடத்தினார். 


You May Also Like

  Comments - 0

  • dene Wednesday, 13 November 2013 07:22 AM

    வாழ்க

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .