2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரதிநிதிகளை வரவேற்க மட்டக்களப்பில் பலத்த ஏற்பாடு

Kogilavani   / 2013 நவம்பர் 13 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு நகரின் பல பகுதிகளில் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டிற்கு வாழ்த்து தெரிவித்தும் இளவரசர் சாள்சை வரவேற்கும் முகமாகவும் பாதாதைகள் இன்று புதன்கிழமை கட்டப்பட்டுள்ளன.

நகர பொலிஸ் நிலைய சுற்றுவட்டம், காந்தி சதுக்கம், நீதிமன்ற வளாகம் மற்றும் நகர மணிக்கூட்டுக் கோபுரம் ஆகிய
இடங்களில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மக்கள், நகர வர்த்தகர்கள், தனியார்கள் என பலரால் இப்பதாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை மட்டக்களப்பு நகர அழகுபடுத்தல் திட்டத்தில் மீதியாகவுள்ள வேலைகளும் பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகளின்; மட்டக்களப்பு விஜயத்தையொட்டி விரைவுபடுத்தப்படடிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொதுநலவாய நாடுகளின் பிரதிநிதிகள் தமது மட்டக்களப்பு விஜயத்தை இன்று இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .