2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

போரதீவுப்பற்று மத்தியஸ்த சபைக்கான நியமனங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச மத்தியஸ்த சபைக்கான நியமனங்கள் நேற்று (13) போரதீவுப்பற்று – வெல்லாவெளி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கப்பட்டன.

போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரிவின் மத்தியஸ்த சபை தவிசாளர் த.திருவருட்செல்வன், உபதவிசாளர் வ.பரமலிங்கம் மற்றும் மேலதிக மாவட்ட பதிவானர் எம்.பேரின்பநாயகம், வெல்லாவெளி பொலிஸ்நிலைய சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.சாந்தகுமார், கிராம அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.கணேசமூர்தி மற்றும் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், மத்தியஸ்த சபை உத்தியோகஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

29 மத்தியஸ்த சபை உறுப்பினருக்களுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டன. இதன்போது மத்தியஸ்த சபையிலிருந்து ஓய்வு பெறும் மூவருக்கு ஞாபகச் சின்னங்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .