2025 மே 02, வெள்ளிக்கிழமை

த.ம.வி.பு. கட்சி ஸ்தாபக தலைவரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 14 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஜவ்பர்கான்


தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சயின் ஸ்தாபக தலைவர் குமாரசாமி நந்தகோபனின்(ருகு) 5ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு ரி.எம்.வி.பி. அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

தமிழ் மக்கள் விடுடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில்  நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், பொருளாளர் கே.தேவராஜன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், உள்ளுராட்சி சபைகளின் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் முதலாவது தலைவரான ரகு கடந்த 14.11.2008 அன்று படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரது நினைவாக இன்று தீபம் ஏற்றப்பட்டதுடன் மலரஞ்சியும் செலுத்தப்பட்டது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .