2025 மே 02, வெள்ளிக்கிழமை

வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கல்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


போரினால் காயப்பட்டவர்களுக்கும் கணவர்மாரை இழந்த பெண்களுக்கும்  உதவும்  கனடா மற்றும் அமெரிக்காவிலுள்ள வறியவர்களுக்காக உதவும் அமைப்பின் மூலம் சித்தாண்டி பெருமாவெளி சிறி வாணி வித்தியாலயத்திலுள்ள வறிய மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது.

வறிய மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் வீதம் 37 மாணவர்களுக்கு முப்பத்தேழாயிரம் ரூபாய் பெறுமதியான கல்வி உபகரணங்கள் பாடசாலை பாதணிகள் மற்றும் என்பன வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் பி.சின்னத்துரை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினர் அலுவலகப் பொறுப்பாளர் வ.இனோஜன், பேரவை பிரதி நிதிகளான இ.தேவகுமார், த.லேகானந் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கல்வி உபகரணங்களை வழங்கி வைத்த கனடா, அமெரிக்காவிலுள்ள போரினால் காயப்பட்டவர்களுக்கும், விதவைகளுக்கும், வறியவர்களுக்குமான அமைப்பினருக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தமது நன்றிகளை தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .