2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கின் அபிவிருத்திக்கு வியட்நாம் உதவ வேண்டும்: ஹாபிஸ் நசீர்

Menaka Mookandi   / 2013 நவம்பர் 14 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு வியட்நாம் தனது தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி, உற்பத்தி, கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் வியட்நாம் தூதுவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிழக்க மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டுக்கும் இலங்கையில் உள்ள வியட்நாம் தூதுவர் டொன் சிங் தங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று கொழும்பில் உள்ள வியட்நாம் தூதுவராயலத்தில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் அமைச்சரோடு அமைச்சின் செயலாளர் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் ஞானசேகரம், அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகர் சமந்த அபேவிக்கிரம அவர்களும் வியட்நாம் தூதுவர், தூதரக பொருளாதார அபிவிருத்திக்கான உதவி ஆலோசகர் பங் ட்ரொங் துவான் ஆகியோரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண  சபையால் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி முன்னெடுப்புகள் மக்களின் வாழ்வாதார உதவிகள், வறுமை ஒழிப்பு, சிறு கைத்தொழில் அபிவிருத்தி, விவசாயம், கால்நடை, மீன்பிடி, சுற்றுலாத்துறை தொடர்பாக அமைச்சின் கீழுள்ள வேலைத்திட்டங்களை தெளிவு படுத்தி கூறியதோடு எதிர்காலத்தில் வியட்நாம் தனது தொழில்நுட்ப உதவிகளையும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு தனியார் துறையின் பங்களிப்பு முக்கியம் எனவும் இதற்கு வியட்நாம் உதவவேண்டுமெனவும் தூதுவரிடம் கேட்டுக் கொண்டதொடு விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யுமாறும் தூதுவரிடம் மாகாண அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அழைப்பு விடுத்தார்.

மேலும் வியட்நாம் நாட்டின் வளர்ச்சியும், அபிவிருத்தியும் யதார்த்தபூர்வமாக தன்னிறைவு அடைந்து வருகின்றமையும் இதன் மூலம் இலங்கையில் இது வரைக்கும் முழு இடங்களிலும் அபிவருத்திப் பணிக்காக உதவியுள்ள போதிலும், குறிப்பாக கிழக்கு க்காணத்திலும் தனது அபிவிருத்திக்கான முன்னெடுப்புக்களை விரிவுபடுத்த வேண்டும் எனவும் அமைச்சர்இதன் போது தூதுவரிடம் முன்வைத்தார்.

அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்கள் கிழக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தவுள்ள முதலீட்டுத் திட்டங்களின் மும்மொழிவுகளையும் வியட்நாம் தூதுவரிடம் கையளித்தார். விரைவில் திட்டங்களை  நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளையும் தான் மேற்கொள்வேன் என்று அமைச்சரிடம்; வியட்நாம் தூதுவர் உறுதியளித்ததோடு மிகக்கூடிய விரைவில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சரிடம் அவர் தெரிவித்ததாக அமைச்சரின் ஊடக இணைப்பாளர் தெரித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .