2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மட்.தொழில்நுட்பக்கல்லூரியின் பிரதி அதிபராக எஸ்.தியாகராஜா நியமனம்

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ரவீந்திரன்

மட்டக்களப்பு, தொழில்நுட்பக்கல்லூரியின் புதிய பிரதி அதிபராக எஸ்.தியாகராஐh வியாழக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியின் விரிவுரையாளராக கடமையாற்றிய இவர் பதவி உயர்வுடன் மட்டக்களப்பிற்கு நியமிக்கப்பட்டார்.

பாரிய  கல்விசார்  மாற்றத்தை  மட்டக்களப்பு  தொழில்நுட்பக்கல்லூரியில் எதிர்பார்த்தே இந்த விசேட நியமனம் வழங்கப்பட்டதாக தொழில்நுட்பக்கல்வி பயிற்சி திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நியமனம்; தொழில்;நுட்பக்கல்வி பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ளது. 

எஸ்.தியாகராஐh   இலங்கை  தொழில்நுட்பக்கல்விச்சேவையின் 2ஆம்  தர  அதிகாரியும்  விரிவுரையாளராக   19  வருட  அனுபவசாலியும்   ஆவார்.

ஆய்வுக்கட்டுரைகளை   எழுதிவரும்  இவர்  களுதாவளையை பிறப்பிடமாகக்கொண்டவர்.

மிக விரைவில் மட்டக்களப்பு தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபராக நியமிக்கப்படுவார் எனத் தெரியவருகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .