2025 மே 02, வெள்ளிக்கிழமை

பாலர்களுக்கு சுகாதாரப் பட்டறை

Kogilavani   / 2013 நவம்பர் 15 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'ஆரோக்கியமான குடும்பம் உங்களைப் பாதுகாக்கும்'; எனும் கருப்பொருளின் கீழ் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி செயற்றிட்டத்தினூடாக பாலர்களுக்கு சுகாதாரப் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகின்றது.

செங்கலடி மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் முன்பள்ளிச் சிறார்களுக்கு சுகாதாரப் பட்டறை வகுப்பு நடத்தப்பட்டது.

பற்சுகாதாரம் சம்பந்தப்பட்ட பயிற்சிப்பட்டறையை பற்சிகிச்சை விஷேட வைத்திய நிபுணர் சுந்தரரேஸ்வரி சயனொளிபவன் நடத்தினார்.

ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர், தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவியாளர் எம்.எம். சர்ஜுன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ. மதிராஜ்உட்பட முன்பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .