2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கையடக்க தொலைபேசியில் ஆபாசபடம் பார்த்த இளைஞன் கைது

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
 
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்துக்கு முன்பாகவுள்ள பகுதியில் நேற்று இரவு கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
 
வீதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், வீதியின் அருகில் மூவர் கூடி நின்று கையடக்க தொலைபேசியில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக்கண்டு அவர்களிடம் விசாரணை செய்தபோது கையடக்க தொலைபேசியில் ஆபாசப்படங்கள் இருப்பதனைக் கண்டுள்ளனர்.
 
இதன்போது கையடக்க தொலைபேசியின் உரிமையாளரான 23 வயதுடைய இளைஞர் கைதுசெய்யப்பட்டதுடன் ஏனைய இருவரும் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
 
கைதுசெய்யப்பட்ட இளைஞனை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .