2025 மே 01, வியாழக்கிழமை

சுத்திகரிப்பு ஊழியர் மரத்திலிருந்து விழுந்து படுகாயம்

Kanagaraj   / 2013 நவம்பர் 16 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மாணிக்கப்போடி சசிகுமார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் சுத்திகரிப்பு ஊழியர் வைத்தியசாலையில் வளாகத்திலிருந்த வேப்ப மரத்திலேறி மரக்கிளைகளை வெட்டியபோது தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் படுகாயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்தமையினால் அவர் கண்டி பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளார்.

சுத்திகரிப்பு ஊழியராகக் கடமையாற்றம் திருப்பழுகாமம் காந்திபுரத்தைச் சேர்ந்த ராஜரட்ணம் நந்தகுமார்(18வயது) என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

நேற்று வெள்ளிக் கிழமை இடம்பெற்ற சம்பவத்தில்  முள்ளந்தண்டு மாதிக்கப்பட்டதுடன் தலைப் பகுதியும் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இந்த இளைஞன் வேலைக்கு சேர்ந்து 24 நாட்களே ஆகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .