2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

ஆலயங்களில் கொள்ளையிட்ட இருவர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.ருத்திரன்

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக பல் வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள்    இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளதுடன்  இவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து பெறுமதி வாய்ந்த பொருட்களும்  கைப்பற்றபட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தர்மிக நவரத்ன தெரிவித்தார்.

இரவு நேர காவல் கடமையில் ஈடுபட்டு வந்த பொலிசார்  விநாயகபுரம் வாழைச்சேனை பகுதியில் மேற்படி நபர்களை கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

இவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து கும்புறுமூலை ஸ்ரீ மாணிக்கபிள்ளையர்  ஆலயம், பட்டியடிச்சேனை நாகதம்பிரான் ஆலயம் மற்றும் தனியார் வீடுகளில் களவாடப்பட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .