2025 மே 01, வியாழக்கிழமை

சீனன்குடா மீன்பிடி நிலையத்திற்கு அமைச்சர் ஹாபிஸ் நஸீர் விஜயம்

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடிவேல்-சக்திவேல்


திருகோணமலையில் உள்ள சீனன்குடா மீன்பிடி நிலையத்திற்கு சனிக்கிழமை (16)  கிழக்கு மாகாண விவசாய கால்நடை அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் விஜயம் செய்தார்.

இதன்போது சீனன்குடா மீன்பிடி நிலையத்தினை பார்வையிட்ட அவர் மீனவர்களின்  குறைகளையும் கேட்டறிந்தார்.

இவ்விஜயத்தின்போது,  அமைச்சருடன் சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், சவுதி அரேபியாவின் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் ஸஹலி;, கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி, அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண மீன்பிடிப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகளும் கலந்துகொண்டு அங்கு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த சவூதி அரேபியாவின் முன்னாள் பிரதி விவசாய அமைச்சரும், சவுதி அரேபியாவின் மீன்பிடி கூட்டுத்தாபனத்தின நிறைவேற்று பணிப்பாளருமான பொறியியலாளர் முஹமட் அல் ஜாபர் சஹலி,
'புதிய தொழில்நுட்ப வசதிகளையும் மீன்பிடி ஏற்றுமதிக்கான சந்தை வாய்ப்புக்களையும் குறிப்பாக சவூதி அரேபியாவிற்கு அதிகமான மீன்களை ஏற்றுமதி செய்வதற்குரிய சகல வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்' என  தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கருத்து தெரிவிக்கும் போது, 'இரு நாடுகளுக்குமுள்ள வர்த்தக உறவினை பலப்படுத்துவதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றமுடியும். இதற்கூடாக மீனவர்களின் வறுமை நிலையினை குறைக்க முடியும்' எனவும் அமைச்சர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .