2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுப்பு

Kogilavani   / 2013 நவம்பர் 18 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை  டெங்கு பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை வடக்கு சுகாதார அலுவலகம், விசேட அதிரடிப்படையினர், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், மாநகர சபை உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது நாவற்குடா பிரதேசத்தில் வீடுவீடாக சென்று பொலிஸார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், சுற்றுப்புறச் சூழல் என்பவற்றை பரிசோதித்ததுடன் டெங்கு தொடர்பான அறிவூட்டலையும் செய்தனர்.

வீடுகளில் காணப்பட்ட திண்மக்கழிவுகளையும் இதன்போது அவர்கள் அகற்றினர்.

இதில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அஜித் பிரசன்னா, மற்றும் காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.பி.ரணசிங்க, மற்றும் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்;.நந்தகுமார், பொதுச்சுகாதார பரிசோதகர்கர்களான எஸ்.செனவிரட்ன, ஆர்.தேவேநேசன், கே.ராஜேந்திரா உட்பட விஸேட அதிரடிப்படையினர் கலந்து கொண்டனர்.
இதன்போது, சிரமதானமும் முன்னெடுக்கப்பட்டது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .