2025 மே 01, வியாழக்கிழமை

போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு புதிய நிரந்தரக் கட்டடம்

Kogilavani   / 2013 நவம்பர் 19 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல்-சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபைக்கு கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது புதிய நிரந்தரக் கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த பிரதேச சபை அமையப்பெற்ற காலத்திலிருந்து இன்றுவரை தனியார் கட்டிடத்திலே இயங்கிவந்தது.

இந்நிலையில் தற்போது இப்பிதேச சபைக்கு புதிய நிரந்தரக் கட்டிடமொன்று வெல்லாவெளியில் அமைக்கப்பட்டு வருகின்றது.

பொருளாதார அமைச்சின் கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ்   29.99 மில்லியன் ரூபாசெலவில் இக்கட்டிடம் அமைக்கப்பட்டு வருவதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எஸ்.குபேரன் தெரிவித்தர்.

இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டவுடன் தமது சேவைகளை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .